Welcome 😊

Azhukain pallathakkil song lyrics

0 minute read

Azhukain pallathakkil song lyrics



அழுகையின் பள்ளத்தாக்கில்
நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று
நீர்தானைய்யா அபிஷேக மழையும்
நீர்தானைய்யா

1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி
துதித்து மகிழ்கின்றது
என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள்
விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2
பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த
வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி
சொல்வேன்
கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
- 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்